மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் ஜூலை 10ம் தேதி என தகவல்

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அமைய உள்ள மத்திய அரசு, ஜூலை 10ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைக்கு தேர்தல் நடைபெற இருந்ததால், கடந்த பிப்ரவரி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. புதிய அரசு அமையும் வரை நிதிச் செலவினங்களுக்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு நாளை பதவியேற்க உள்ளது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தும். முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக நிதி அமைச்சக அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஜூலை 10ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கு கூடுதல் முக்கியவத்தும் அளிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version