8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.
நாடாளுமன்ற அமோக தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற மோடி தலைமையிலான அரசில் 8 அமைச்சரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி நியமனங்களுக்கான அமைச்சரவை குழு, வீட்டு வசதி அமைச்சரவை குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, பாதுகாப்பிற்கான அமைச்சரவை குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டு அமைச்சரவை குழு ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.