போதிய நிவாரண நிதி இருந்தும் தமிழகத்திற்கு தர மத்திய அரசு மறுப்பு – தமிழக அரசு குற்றச்சாட்டு

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.

கஜா புயல் நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 357 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு நிவாரண நிதியாக வழங்கியுள்ளது என்றும், போதிய நிதி இருந்தும் தமிழகத்திற்கு ஒதுக்க மத்திய அரசு மறுப்பதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

 

Exit mobile version