விபத்துக்களை தவிர்க்கும் வகையில் கனரக வாகனங்களின் பின்புறம் எச்சரிக்கை கருவிகளை 2020-ம் ஆண்டுக்குள் பொருத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் அப்பகுதிகளில் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்த விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களின் பின்புறம் எச்சரிக்கை கருவிகளை வரும் ஏப்ரல் 2020-க்குள் பொருத்த மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு எச்சரிக்கை கருவிகளை பொருத்தவும் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் விபத்துக்களை பெருமளவில் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.