நிதி ஆண்டினை ஜனவரியில் இருந்து டிசம்பராக மாற்றும் அறிவிப்பினை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஆண்டின் துவக்கம் ஜனவரியில் தொடங்கினாலும் நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1ல் தான் தொடங்குகிறது. அதன்படி நிதி ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு முதலமைச்சர்கள் கலந்து கொண்ட நிதி ஆயோக் கூட்டத்தில் நிதி ஆண்டினை ஜனவரியில் இருந்து டிசம்பராக மாற்றும் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த நிலையில் நிதி ஆண்டினை மாற்றும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என நிதித்திறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.