காஷ்மீர் விவாகரம் குறித்து பேசிய எர்டோகனுக்கு மத்திய அரசு கண்டனம்

உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என துருக்கி அதிபர் எர்டோகனை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட துருக்கி அதிபர் எர்டோகன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அனைத்து விவகாரங்களிலும் பாகிஸ்தானுக்கு துருக்கி துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து இருநாட்டு தரப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண விரும்புவதாகவும், குறிப்பாக காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என, துருக்கி அதிபர் எர்டோகனுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பிரச்னை உள்நாட்டு விவகாரம் எனவும் துருக்கி அதிபரை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version