மத்திய அரசின் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா நாகலாந்துக்கு பொருந்தாது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா நாகலாந்துக்கு பொருந்தாது என மாநில முதல்வர் நெய்பியு ரியோ உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு குடிபெயர்ந்த, முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இதற்கு பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம் மாநிலத்திலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில். நாகாலாந்தும் அதை ஏற்க மறுத்துள்ளது. நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ அரசியல் சாசன சட்டப்பிரிவு 371ன் படி நாகலாந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாகாலாந்துக்கு பொருந்தாது என உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தங்கள் அமைச்சரவை கூடி எடுத்த முடிவுகளின் அடிப்படையிலேயே இந்தக் கடிதம் எழுதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version