ஆந்திராவில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்போவதாக, மத்திய அரசு மிரட்டி வருகிறது என்று, மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருக்கிறார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய சந்திர பாபு நாயுடு, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடியின் ஆட்சி, நாட்டை பின்னோக்கி எடுத்து சென்றதாக குற்றம் சாட்டினார். ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு மிரட்டு வருவதாக கூறிய அவர், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்று தெரிவித்தார். கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக நடந்த எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட பேரணியை போல், அமராவதியிலும் விரைவில் நடத்தப்படும் என சந்திரபாயு நாயுடு கூறியுள்ளார்.