நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா நிறைவேற்றப்படுவதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாட்டில் பாதிப்பு இருக்காது என மக்களவையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்கள் இடையேயான நதிநீர் பிரச்சனை சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது, அதற்கு பதிலளித்த அவர், நதி நீர் பிரச்சனைகள் தொடர்பாக மாநிலங்களுடன் கலந்தாலோசித்தும் எவ்வித முன்மொழிவும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் 2013ல் மசோதா தயாரிக்க திட்டமிட்ட போது அனைத்து மாநிலங்களுக்கும் யோசனைகள் தெரிவிப்பதற்காக அனுப்பப்பட்டது. மசோதா வரைவு தயாரானதும் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது, இந்த மசோதா தற்போது சட்டப்பிரிவு 6ஏ எந்த வகையிலும் மாற்றப்படவில்லை என குறிப்பிட்டார். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்தார்.