தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு நதிகளில் இருந்து எடுக்கப்பட்ட புனிதநீர், யானை மூலம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், நாளை யாக சாலை பூஜை தொடங்குகிறது. இதை முன்னிட்டு காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு உள்ளிட்ட நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீரானது, தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் வைத்து பூஜிக்கப்பட்டது.
பின்னர் பெண்கள் பங்கேற்ற கோலாட்டம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் முன்செல்ல, யானை மீது புனிதநீரானது தஞ்சை பெரிய கோயிலுக்கு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.