தேர்தலில் சாதி, மதத்தைக் கொண்டு ஆதாயம் தேடுபவர்களை கண்காணிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தலில் சாதி, மதத்தைக்கொண்டு ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவர்களைக் கண்காணிக்கவும் வேண்டுமென உச்ச நீதிமன்றம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நடந்த வழக்கு விசாரணையில், சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும், நோட்டீஸ் அனுப்பவும் மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை என்றும், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை நாளைக்குள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.