ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 சதவீதம் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது
50 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டுமானல் தேர்தல் முடிவுகளை வெளியிட 6 நாட்கள் தாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. மேலும் ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த பதில் மனுவில், விவிபேட் சீட்டுகள் எண்ணும் ஆட்களையும், எண்ணப்படும் அரங்கங்களையும் அதிகரிப்பது பெரிய பிரச்னை அல்ல. ஆகையால் சரிபார்ப்பு சதவீதத்தை அதிகரிக்க, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவிப்பதற்கு அனுமதிக்க கூடாது என்று தெரிவித்திருந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஓட்டு பதிவு இயந்திரங்களில் வாக்களிக்கும் போது சரியான சின்னத்திற்கு வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் ஒப்புகை சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது குறைவான எண்ணிக்கையிலேயே விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் 50 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.