ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடுத்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தனது அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தமிழக அரசு தரப்பில் கடுமையாக எதிர்த்துள்ளனர். அரசாணை குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட முடியாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.