காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு வங்கதேசம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியாவிற்கு பிரான்ஸ் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரோஷி, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் வெஸ் லெ டிரியனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று குரோஷி பிரான்ஸை வலியுறுத்தினர். இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் குறித்து பிரான்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகள் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் இந்திய நாட்டின் உள் விவகாரம் என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்கும் பாகிஸ்தானின் தொடர் முயற்சி தோல்வி அடைந்து வருகிறது. மொத்தமுள்ள 51 முஸ்லிம் நாடுகளில் ஒன்று கூட காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version