உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் மீது, நஷ்டஈடு கேட்டு தொடர்ந்த வழக்கை பெப்சி நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சில விவசாயிகள், FL-2027 மற்றும் FC-5 ரக உருளைகிழங்குகளை பயிரிட்டு விவசாயம் செய்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு பெப்சி நிறுவனம் எப்.எல். புதிய வகை உருளை கிழங்கை கண்டறிந்து 2027 வரை அதற்கான காப்புரிமையை பெற்றுள்ளது எனக்கூறி, 9 விசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் உருளைக் கிழங்கை பயிர் செய்த குஜராத் விவசாயிகளிடம் ரூ.1.05 கோடி நஷ்ட ஈடு கேட்டும் பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் பயிர்களின் விதைகளைப் பதப்படுத்தி, மீண்டும் அதைப் பயிர் செய்யத் தங்களுக்கு உரிமை உண்டு என எதிர்ப்பு தெரிவித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியது. பெப்சி நிறுவனம் மீது சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் விவசாயிகள் மீதான வழக்கை, அந்நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.