வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி அளிக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்பு மற்றும் வறட்சியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை மக்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டபேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதனை எதிர்த்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில்ம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.