இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு – இன்று விசாரணை

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி, அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும், ராஜபக்சே அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய சூழலில், ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லாத காரணத்தால், இலங்கை நாடாளுமன்றத்தை சிறிசேனா கலைத்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று, தமிழ் தேசிய கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 10 கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனுக்களை மூன்று நீதிபதிகள் அடங்கிய இலங்கை உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.

Exit mobile version