பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த கார் தீப்பற்றியதால் பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி என்பவர், தொழில் விஷயமாக பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலைப்பேட்டைக்கு காரில் வந்துள்ளார். குள்ளக்கபாளையம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள நார் தொழிற்சாலைக்கு சென்று திரும்பி வந்து பார்க்கும்போது, சாலையில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து தீயனைப்பு துறைக்கு தகவல் கொடுக்கபட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர், தீ விபத்தில் காரின் உள்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version