மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தேர்த் திருவிழா

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திகடன் செலுத்தினர்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் பெருவிழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன் இந்தாண்டிற்கான மாசி பெருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு கட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Exit mobile version