திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரைக்கூட சரியாக குறிப்பிடாத அக்கட்சித் தலைவர் ஸ்டாலினின் செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு, கள்ளக்குறிச்சி வேட்பாளர் கௌதமசிகாமணியை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கௌதமசிகாமணி என்ற பெயரை தெய்வ சிகாமணி என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைக்கேட்ட முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, அவரது தவறை மேடையிலேயே சுட்டிக்காட்டினார்.
கூட்டத்தில் ஸ்டாலின் பிரசாரம் செய்துக் கொண்டிருந்தபோது, கூட்டணி கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல், கர்ம சிரத்தையுடன், ஸ்டாலின் தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றினார். இதனால் கூட்டணி கட்சியினரும் அதிருப்தி அடைந்தனர்.