பேருந்தில் வைத்த பணப்பை திருடிசென்ற 5மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

பேருந்தில் வைத்த பணப்பை திருடிசென்ற ஐந்து மணி நேரத்தில் மீட்ட கோயம்பேடு பேருந்து நிலைய காவல்துறையினர்…

சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் சஹானாதேவி. இவர் நேற்று மாலை சிதம்பரம் செல்வதற்காக தனது குழந்தைகளோடு கோயம்பேட்டில் , சிதம்பரம் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். தனது பையை இருக்கையில் வைத்திருந்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பை காணாமல் போயுள்ளது.

அந்த பையில் 1லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், விலை உயர்ந்த செல்போனையும் வைத்திருந்துள்ளார். இது தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விமல்பாபு.

புகாரை பெற்றுக்கொண்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் லாதா மற்றும் ஆய்வாளர் முருகன் இருவரும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளையும், சஹானாதேவியின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்த find my device செயலியின் உதவியையும் வைத்து குற்றவாளியை பின் தொடர்ந்தனர்…

குற்றவாளியை முடிச்சூர் பகுதியில் கையும் களவுமாக பிடித்தனர். பிறகு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது பெயர் ஆனந்தன் என்பதும் அவரது வயது 56 என்பதும் தெரியவந்தது…

குற்றவாளி ஆனந்தனை கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் தாம்பரம், சேலையூர், சிட்லப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டர்.

அவனிடம் இருந்து 1 லட்சத்து 72000 ரூபாய் பணத்தையும் செல்போனையும் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். குற்றவாளி ஆனந்தன் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்… குற்றவாளியை எளிமையாக பிடிக்க உதவிய find my device போன்ற பாதுகாப்பு செயலிகளை அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்வது நல்லது என காவல்துறையினர் கூறுகிறார்கள்.

Exit mobile version