சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்த சுமார் 10 ஆயிரம் பேரிடம் 16 லட்சம் ரூபாய் அபராதத் தொகையைப் போக்குவரத்துக் கழகம் வசூலித்துள்ளது.
மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் பயணச் சீட்டு எடுக்கவில்லை என்றால் 500 ரூபாய் அபாரதம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 3 ஆயிரத்து 915 பேர்களிடம் 6 லட்சத்து 850 ரூபாயும், ஜூன் மாதம் 3ஆயிரத்து 658 பேரிடம் 5 லட்சத்து 24 ஆயிரத்து 100 ரூபாயும், ஜூலையில் 3 ஆயிரத்து 218 பேரிடம் 5 லட்சத்து 55ஆயிரத்து 900 ரூபாயும் என மூன்று மாதங்களில் 10 ஆயிரத்து 791 பேரிடம் 16 லட்சத்து 80 ஆயிரத்து 850 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணசீட்டு மற்றும் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்படும் உரிய பயண அட்டை இல்லாமல் பயணம் செய்வது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையைப் போக்குவரத்து கழகம் எடுத்துள்ளது.