ஐக்கிய அரபு அமீரகம் புஜைராவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெறும் காளை சண்டையை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.
ஐக்கிய அரபு அமீரக பாரம்பரிய விளையாட்டான காளை சண்டை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும். இரண்டு காளைகளை ஒன்றோடொன்று மோதவிட்டு, எந்த காளை பின்வாங்கி ஓடுகிறதோ அது தோற்றதாக அறிவிக்கப்படும். போட்டியின் முக்கியவிதியாக இரண்டு காளைகளும் ஒரே எடை உள்ளதாக இருக்க வேண்டும். அமீரகத்தில் பந்தயம் வைத்து விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளதால், காளைச் சண்டை விளையாட்டில் எந்த ஒரு பந்தயமும் வைக்கப்படுவதில்லை. மாறாக வெற்றி பெற்ற காளை ஏலத்தில் விடப்பட்டு. வெற்றி பெற்ற காளை அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்படும்.