கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 250 காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன ஒரப்பம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 250 காளைகள் கலந்து கொண்டன.
இதில், நிர்ணயக்கப்பட்ட தூரத்தை நோக்கி சீரிப்பாய்ந்த காளைகளை, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வருகை தந்திருந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். மேலும், இந்த போட்டியில் குறிப்பிட்ட தூரத்தை குறைவான நேரத்தில் கடந்த காளைகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
எருது விடும் விழாவை முன்னிட்டு கந்திகுப்பம் மற்றும் பர்கூர் காவல் நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் கால்நடை சிகிச்சை வாகனமும், ஆம்புலன்ஸ் வாகானமும் கொண்டுவரப்பட்டிருந்தது.