ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று இந்த கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.