சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் பிரையண்ட் பூங்கா

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பலவகையான கள்ளி செடிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் மலைகளின் நடுவே பிரசித்தி பெற்ற பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. வருடம் முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும் இந்த பூங்கா, அரசு தோட்டகலை துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாளிகையின் உள்ளே பிறைமுலாஸ், கோலியாஸ், பெகோனியா உள்ளிட்ட பல வகையான அழகிய கற்றாழை செடிகள் மற்றும் அறிய வகை ஆர்கிட், பெரணி மற்றும் கிலெக்சினிய போன்ற அரிய வகை மலர் செடிகள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த மாளிகையில் 60 வகையான கற்றாழை மற்றும் கள்ளி செடி வகைகளை சுற்றுலாப் பயணிகள் அதிகம் ரசித்து செல்கின்றனர். மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளுக்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்தி வைத்திருப்பதால் இங்கு வரும் பார்வையாளர்கள் கண்ணாடி மாளிகையை பெரிதும் விரும்புகின்றனர். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த கண்ணாடி மாளிகைக்குள் தவறாமல் வந்து செல்வதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Exit mobile version