மணக்கோலத்தில் வந்து புதுமணத் தம்பதிகள் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையம் கிராமத்தில், ஒரே பகுதியை சேர்ந்த ராஜராஜன்- நந்தினிதேவி இருவருக்கும், இன்று காலை துக்கியாம்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும், நேராக துக்கியாம்பாளையம் வாக்கு சாவடிக்கு சென்று மணமக்கள் வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணமக்கள், ஒரே நாளில் நல்ல வாழ்க்கைதுணையும், நல்ல தலைவரையும் தேர்தெடுக்கும் வாய்ப்பு அமைத்ததாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.