பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரெக்ஸிட் தொடர்பான ஒப்பந்தம் இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் 29ம் தேதி பிரிட்டன் வெளியேறவுள்ளது. இந்த வெளியேற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றியம் இடையே 2018ஆம் ஆண்டு நவம்பரில், பிரிக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 432 எம்பிக்கள் எதிராக வாக்களித்ததால் ஒப்பந்தம் தோல்வியடைந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை, நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பிரதமர் தெரேசா மே தாக்கல் செய்தார். ஒப்பந்தத்திற்கு எதிராக 391 எம்பிக்களும் ஆதரவாக 242 எம்பிக்களும் வாக்களித்தனர். இதனால் 142 வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது