புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கலை அடுத்துள்ள திருநள்ளாற்றில் சனி பகவானுக்கு தனி சன்னதி அமைத்து கோவில் உள்ளது. நவகிரகங்களில் பரிகார ஸ்தலமான இங்கு வைகாசி விசாகத்தை ஒட்டி நடைபெறும் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து சிவாசாரியாக்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள இசையுடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் துவங்கியது. இதனை தொடர்ந்து வரும் ஜூன் 12ஆம் தேதி தேரோட்டமும், 13ஆம் தேதி தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இறுதியாக 16ஆம் தேதி விசாக தீர்த்த நிகழ்ச்சியோடு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.