திருமண மண்டபத்தில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்ற சிறுவன்

மதுரையில் திருமண மண்டபத்தில் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற சிறுவனை சி.சி.டி.வி காட்சி அடிப்படையில் பிடித்த காவல்துறையினர் பணத்தை மீட்டனர்.

மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் கடந்த 18ஆம் தேதி காளவாசல் பகுதியில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் மகளுக்கு சுபநிகழ்ச்சி வைத்து இருந்தார். இந்த நிலையில் திருமண மண்டபத்தில் வைத்திருந்த சுமார் ஒரு லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர், அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மண்பத்தில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் பணத்தை திருடியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிறுவனை பிடித்த அவர்கள் பணத்தை பறிமுதல் செய்து ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version