துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்தில் உள்ள லிப்ட் ஒன்றில் 2 சிறுமிகள், ஒரு சிறுவன் என மூவர் ஏறுகின்றனர். அவர்களில் அந்த சிறுவன் மட்டும் கழுத்தில் விளையாட்டாகக் கட்டிய கயிரோடு ஏறுகிறான். அந்தக் கயிற்றை முழுவதுமாக லிப்டுக்குள் இழுக்க அவன் மறந்து விடுகிறான்.இதனால் லிப்ட் மேலே ஏறும் போது சிறுவனின் தலையில் கட்டப்பட்டு சிக்கிய கயிறு வெளியே சிக்கிக் கொள்ள, சிறுவன் மேலே தூக்கப்பட்டு தூக்கில் தொங்கும் நிலைக்குப் போகிறான்.
இதைப் பார்த்த அவனது சகோதரி, உடனே சிறுவனின் கால்களைப் பிடித்துத் தூக்கி, அவன் கழுத்தைப் பாதுகாத்து, லிப்டில் இருந்த அவசர பொத்தானை அழுத்துகிறாள். சிறுமியின் இந்த சமயோசித செயல் லிப்டில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது. இது சமூக வலைத் தளத்திலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மிக அபாயகரமான சூழலில், அதீத புத்திசாலித் தனத்தோடு செயல்பட்ட சிறுமியைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.