பூஞ்ச் பகுதியில் அன்னபிளவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ராணுவத்தினர் உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் உள்ள கில் காகா கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஐடா பர்வீன். பிறந்தது முதலே இந்தச் சிறுவன் அன்னபிளவு நோயால் அவதிப்பட்டு அவதிப்பட்டு வந்தான். இந்நிலையில் சமீபத்தில் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் romeo force ஐ சேர்ந்த வீரர்கள் மருத்துவ முகாம் நடத்தினர்.
இதில் சிறுவன் ஐடா பர்வீனின் பாதிப்பு குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகளை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதில் அவனது பாதிப்பை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான செலவை இந்திய ராணுவத்தினர் ஏற்றனர்.
அதன்படி சிறுவனின் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. சிகிச்சைக்கு முன்புள்ள புகைப்படத்தையும், சிகிச்சைக்கு பின் அச்சிறுவன் முகம் மலர்ந்து சிரிக்கும் புகைப்படத்தையும் ADG PI – INDIAN ARMY தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தினரின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.