ரயில் டி.டி.ஆரிடமே டிக்கெட் கேட்டு மாட்டிக் கொண்ட சிறுவன்

ரயில் டிக்கெட் பரிசோதகரிடமே டிக்கெட் கேட்டு மாட்டிக்கொண்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

திருவனந்தபுரத்தில் இருந்து கோரக்பூருக்கு செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஜெயச்சந்திரன், டிக்கெட் சோதனை பணியை முடித்துவிட்டு ரயிலில் காலியாக இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்துள்ளார். அப்போது, ரயில் பெட்டிக்குள் ஏறிய 17 வயது சிறுவன், டிக்கெட் சோதனைக்காக வந்துள்ளதாக கூறி ஜெயசந்திரனிடமே டிக்கெட் கேட்டு அதிர்ச்சி அளித்துள்ளார். தன்னிடம் டிக்கெட் கேட்ட நபரிடம், ஐ.டி. கார்டை காண்பிக்குமாறு ஜெயசந்திரன் கேட்டதற்கு, அந்த சிறுவன் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் அந்த சிறுவனை மடக்கி பிடித்த ஜெயசந்திரன், ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அந்த சிறுவன் அடைத்தனர்.

Exit mobile version