ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின் போது குண்டு வெடித்ததில் 65க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசைநிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமான மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 60 பேர் பலியாகினர். 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்க படையினருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் மறுபுற குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.