பெரம்பலூர் அருகே இறந்து போன தந்தையின் உடலை வீட்டிற்குள்ளே அடக்கம் செய்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது!

பெரம்பலூர் அருகே இறந்து போன தந்தையின் உடலை வீட்டிற்குள்ளே அடக்கம் செய்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது. உடலை எடுத்துச்செல்ல விடாமல் போலீசாருடன் மல்லுகட்டிய மகனை அடித்து இழுத்துச்சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி 3 வது வார்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி . 65 வயதான இவர் கூலிதொழிலாளி. இவரது மனைவி அஞ்சனம். இவரது மகன் பாலகிருஷ்ணன் லாரி டிரைவராக ஈரோட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் உடல்குறைவால் ராமசாமி இறந்துள்ளார்.

வீட்டுக்கு முன்புறமுள்ள தென்னை மரம் அருகில் தனது உடலை புதைக்கவேண்டும் என ராமசாமி கூறியிருந்தாக அவரது மனைவி , தன் மகன் பாலகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். நேற்று இரவு பாலகிருஷ்ணன் தன் வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் உடலை அடக்கம் செய்ய குழிதோண்டி உள்ளார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்
எதிர்ப்பு தெரிவித்தனர்.

ட்டிற்குள்ளேயே நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் சுவர் ஓரத்தில் ராமசாமியை உட்கார்ந்த நிலையில் வைத்து அவரது உடலை சுற்றி செங்கல் கற்களை வைத்து ஜீவசமாதி கட்டியுள்ளார். சமாதியின் மீது ராமசாமியின் போட்டோ வைத்து மாலை அணிவித்து விளக்கு வைத்து வணங்கியுள்ளனர். இது பற்றி தகவலறிந்த அப்பகுதி வி.ஏ.ஓ அன்புராஜா பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார்.

டிஎஸ்பி கென்னடி, இன்ஸ்பெக்டர் சுப்பையா, தாசில்தார் பாரதிவளவன் மற்றும் ஊராட்சி தலைவர் சுதாகர் ஆகியோர் இறந்து போன ராமசாமியின் உடலை எடுத்து இடுகாட்டிற்கு கொண்டுசெல்ல உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இறந்த ராமசாமியின் மகன் பாலகிருஷ்ணனுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது..

போலீசார் பாலகிருஷ்ணனை தூக்கிச்சென்று வேனில் அடைத்து வைத்தனர். பின்னர் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் வீட்டிற்குள் கட்டப்பட்டிருந்த சமாதியை உடைத்து ராமசாமியின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் முன்னிலையிலேயே இடு காட்டிற்கு கொண்டு போய் நண்பகல் 12 மணியளவில் தகனம் செய்தனர். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version