முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டில் கொரோனா சிகிச்சை பெறலாம் என அறிவித்து மோசடி

மருத்துவக் காப்பீடு மூலம் கொரோனா சிகிச்சை பெறலாம் என மக்களை ஏமாற்றி, பணம் செலுத்தினால் தான் இறந்தவர் உடல் ஒப்படைக்கப்படும் என தனியார் மருத்துவமனைகள் தெரிவிப்பது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள ரஞ்சித் மருத்துவமனையில், ராகேஷ் என்பவர் அவருடைய சகோதரருடன் கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரது சகோதரர் உடல் நலம் சரியாகி வீடு திரும்பிய நிலையில், ராகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கனவே சிகிச்சைக்காக 3 லட்சம் ரூபாய் பணம் கட்டியும், மேலும் 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் உடலை தருவோம் என மருத்துவமனை தரப்பில் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உறவினர்கள் கையில் பணம் இல்லை என்று கூறியபோது, மருத்துவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை முன்பு கொரோனா சிகிச்சைக்கு, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு செல்லும் என்று அறிவிப்பு பலகை வைத்துவிட்டு, சிகிச்சைக்கு பின்னர் பணம் கட்டியாக வேண்டும் நிர்பந்திப்பதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version