மறைந்த நடிகர் கிரேஸி மோகனின் உடல், இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம்

மறைந்த நடிகர் கிரேஸி மோகனின் உடல், இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. நடிகரும், கதை வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். மேடை நாடகள் மூலம் பிரபலமடைந்த கிரேஸி மோகன் , 1983 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு திரையுலகினர் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து இன்று கிரேஸி மோகன் உடல் அவர் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

Exit mobile version