சூடான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நாகை இளைஞரின் சடலம் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது.
கடந்த 3 ஆம் தேதி சூடான் நாட்டில் செராமிக் டைல்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில், 3 தமிழர்கள் உட்பட 23 இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விபத்தில் மரணமடைந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும் தீயில் சிக்கி உயிரிழந்தார்.
இந்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் முயற்சியால் ராமகிருஷ்ணனின் உடல் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டது. அவரை உடலைப் பெற்றுக்கொண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க ராமகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் உடலை மீட்க நடவடிக்கை எடுத்த அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.