புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மாயமான பெண்ணின் சடலம்!!

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து 43 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனூர் அடுத்த மனவெலி பகுதியை சேர்ந்த குணவெளி என்ற பெண் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த குணவெளியின் உடல் கொரோனா பரிசோதனைக்காக இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூறு ஆய்விற்காக பிணவறையில் வைக்கப்பட்ட குணவெளியின் சடலம் திடீரென மாயமானது. தகவலறிந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மருத்துவர்கள் மற்றும் குணவெளியின் உறவினர்கள் அவரது உடலை தேடி வருகின்றனர்.

Exit mobile version