திருவான்மியூர் கடல் பகுதியில் கரைக்கு வரும் அலைகள் உயிரொளிர்வின் காரணமாக நீல நிறமாக காட்சியளித்தது அப்பகுதி மக்கள் மற்றும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
Dinoflagellates என்ற ஒரு வகை பாசியின் காரணமாக, கடலின் கரை பகுதி வரும் அலைகள் நீல நிறமாக காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. அரிய வகை நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வு இரவு நேரத்தில் திருவான்மியூர், நீலாங்கரை கடற்கரையில் காணப்பட்டது.
பொதுவாக இந்த பாசிகள் தற்காப்புக்காக இப்படி ஒளியை வெளியிடுவதாக தெரிகிறது. அதாவது, மீன்கள் இவற்றைச் சாப்பிட முயலும்போது ஒளியை வெளியிடும். அப்படிச் செய்வதன்மூலம், பெரிய மீன்களை இதனால் ஈர்க்கப்பட்டு, அந்த மீன்கள், சிறிய மீன்களைத் தின்றுவிடும் என கூறப்படுகிறது.
இந்திய கடற்பகுதியில் அரிதாக காணப்படும் இந்த பாசி வகை சென்னையில் தெரிந்தது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடல் அலைகள் மின்னும் தகவல் தெரிந்ததை அடுத்து கடற்கரைப் பகுதிக்கு ஆர்வமுடன் கண்டுகளிக்க பொதுமக்கள் அதிகளவில் குவியத் தொடங்கினர்.