சபரிமலையை காப்போம் என்ற முழக்கத்துடன் பா.ஜ.க.வின் ரத யாத்திரை கேரளாவில் துவக்கம்

சபரிமலையை காப்போம் என்ற முழக்கத்துடன் கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் ரத யாத்திரை துவங்கியுள்ளது.

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு அம்மாநில அரசு ஆதரவு தெரிவித்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாநில அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு மாநில அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும், சபரிமலையை காக்கும் வகையிலும், கேரள மாநிலம் காசர்கோட்டின் மாத்தூர் பகுதியில் இருந்து பா.ஜ.க. தனது ரத யாத்திரையை துவக்கியுள்ளது. 13-ம் தேதி வரை 6 நாட்கள் இந்த ரத யாத்திரை நடைபெறவுள்ளது.

ரத யாத்திரையை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா துவக்கி வைத்தார். கேரளாவில் பிணராயி விஜயன் தலைமையிலான அரசு, ஐயப்ப பக்தர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதாக பா.ஜ.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Exit mobile version