போலி புள்ளி விவரங்களை வைத்து பாஜக பேசுகிறது : ப.சிதம்பரம்

பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறித்து நிதி ஆயோக், பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். நாடு இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சியை தங்கள் ஆட்சிக்காலத்தில்தான் கண்டுள்ளது என்று பாரதீய ஜனதா கட்சி கூறுவதை, முன்னாள் நிதியமச்சர் ப.சிதம்பரம் நிராகரித்துள்ளார்.

இதுபற்றி தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “நிதி ஆயோக் போலியான புள்ளி விவரத்தை தந்துள்ளதாக கூறியுள்ளார். இதை ஒவ்வொரு பொருளாதார நிபுணரும், புள்ளி விவர வல்லுனரும் நிராகரிப்பார்கள்” எனவும் அவர் கூறி உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான் சுதந்திரத்துக்கு பின்னர் மிகச்சிறந்த பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது எனவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version