மோடியை எதிர்க்க, எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் வேட்பாளர் உண்டா என, பாரதிய ஜனதா கட்சி சவால் விட்டுள்ளது. 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
எதிர்க்கட்சியினர் மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக,தெலுங்கு தேசம், திரிணமுல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய பொதுச்செயலாளர் கையிலாஷ் விஜய்வார்கியா, தங்களை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் கனவு காணட்டும் என்று கூறினார். அவர்களிடம் மோடியை எதிர்க்க பிரதமர் வேட்பாளர் உண்டா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.