தென்கொரியாவில் வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்காக சவப்பெட்டிக்குள் சில நிமிடங்களை கழிக்கும் விநோத நிகழ்வு நடைபெறுகிறது
சமீபத்தில் சவப்பெட்டிக்குள் மக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவியது. இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை ஏராளமானவர்கள் சவப்பெட்டிகளுக்குள் அமர்ந்திருந்த அந்தப் புகைப்படம் தென்கொரியாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. போட்டோ ஷூட்டுக்காக இது போன்ற புகைப்படத்தை எடுத்திருப்பார்கள் என அனைவரும் நினைத்திருந்த வேளையில் அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியானது. ஆம் அந்த புகைப்படம் போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டது இல்லையாம்,
தென்கொரியாவில் உள்ள ஹியோவோன் என்ற மையம் மக்களுக்கு வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்காக இது போன்ற செய்து வருகிறது. இந்தப் பணியைக் 2012-ம் ஆண்டு முதல் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை இறுதிச்சடங்குகளில் இருப்பது போல மூடப்பட்ட சவப்பெட்டிகளுக்குள் 10 நிமிடங்கள் இருக்க அனுமதிக்கின்றனர். அந்த சூழலில் அவர்களின் மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அந்த மையத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர்கள், மற்றவர்களை மன்னிக்கவும் குடும்பத்தினருடன் இணைந்து வாழவும் பழகிக்கொள்வதாகக் கூறப்படுகிறது.