கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை

கோயிலில் திருடிய பொருட்களை முதல்நாள் எடுத்து கொண்டது போக, மீதி பொருட்களை அடுத்தநாள் எடுக்க வந்த போது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊனாம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருடு போனது, உண்டியல் பீரோ மற்றும் குத்துவிளக்கு ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றதை அடுத்து ஊர்மக்கள் கூடி பேசி கொண்டிதிருந்தனர். அப்போது அங்கு வந்த திருடன், திருடிய ஒரு பகுதி பொருட்களை எடுத்து செல்லும் போது கையும் களவுமாய் பிடிபட்டான். பின்னர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவனை விசாரணை செய்ததில் சின்னகணக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சொட்டசேகர் என்பது தெரியவந்தது. சொட்ட சேகரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version