ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா சட்டவடிவம் பெற்றது

லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் சட்டவடிவம் பெற்றது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ -சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதா, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு மற்றும் காஷ்மீரை ஒருங்கிணைந்த யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதியை மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் மசோதா உள்பட 4 மசோதாக்களை மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பின்னர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. விவாதத்திற்கு பிறகு மசோதாக்கள் மீது தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன.

இந்த 4 மசோதாக்களும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் அவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்தநிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து லடாக், ஜம்மு, காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டார்.

இதையடுத்து இந்த மசோதாக்கள் சட்டவடிவத்தை பெற்றுள்ளது. இதனிடையே அக்டோபர் 31ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Exit mobile version