பெரிய வியாழன் பண்டிகையையொட்டி தேர்தல் தேதியை மாற்றக்கோரிய வழக்கு

தமிழகத்தில் பெரிய வியாழன் பண்டிகையையொட்டி மக்களவை தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்தவ மக்கள் களம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதால், பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டுவரும் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவதில் சிக்கல் ஏற்படும் எனக்கூறி தேர்தல் தேதியை மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Exit mobile version