ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இடிந்து விழுந்த பவானீஸ்வரர் கோயிலின் சுற்றுச் சுவரை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோயில் பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிட்டப் போது இந்த கோயிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் கோயிலை சுற்றிவர முடியாமல் சிரமம் அடைந்தனர். அதனால் கோயிலின் சுற்றுச் சுவரை அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சுற்றுச்சுவர் கட்டுவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி, கட்டுமான பணிகள் தொடங்கின. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோயிலின் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் சத்தியமங்கலம் பகுதி மக்களும், பக்தர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.