40 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது பவானி சாகர் அணை

40 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32 . 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 .47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில மாதங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் 102 அடி கொள்ளளவு மட்டுமே நீர் தேக்கப்பட்டு மீதமுள்ள உபரிநீர் கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்பட்டது.

இந்தநிலையில், 1978-ம் ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு பவானி சாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. காலை நிலவரப்படி நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32 . 8 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2 , 347 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2 , 350 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version