வங்கி மோசடியாளர்கள் பற்றி விவரங்களை வெளியிட வேண்டும் என, பிரதமர் அலுவலகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்களின் பெயர் விவரங்களை வங்கிகள் வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வங்கிகள் அப்படி வெளியிடவில்லை. இந்நிலையில் மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யுலு 66 பக்கங்கள் கொண்ட முழுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், வங்கி மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என, பிரதமர் அலுவலகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தை ரிசர்வ் வங்கி முழுமையாக அலட்சியம் செய்துள்ளது என்றும் ஸ்ரீதர் குற்றம் சாட்டியுள்ளார்.